தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மாணவர்களுக்கு சிறப்புப் போட்டி

DIN

சாத்தான்குளம் வட்டார வளமையத்தில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு சிறப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாத்தான்குளம் ஒன்றிய குறுவளமையங்களில் இருந்து தலா 2 மாணவர்களைத் தேர்வு செய்து 20 மாணவர்களுக்கு டெச்னோ கிளப் சார்பில் சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளை சாத்தான்குளம் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் லீலாவதி தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.  எழுத்துத்தேர்வில் 20, வாய்மொழித்தேர்வில் 10, செய்முறைத்தேர்வில் 70 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் முதல் 3 இடங்களை கைப்பற்றிய மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.500, இரண்டாவது பரிசாக ரூ.400, மூன்றாம் பரிசாக ரூ.300 காசோலைகளாக வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT