தூத்துக்குடி

பஜனை சங்கம ஊர்வலம்

DIN

உடன்குடியில் பாரதமாதா சேவா சங்கம் சார்பில் 20 கிராம சிறுவர்கள் பங்கேற்ற பஜனை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடன்குடி,மெஞ்ஞானபுரம்,சிவலூர்,வைத்திலிங்புரம்,காரங்காடு,பிச்சிவிளை,நயினார்பத்து,தைக்காவூர் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதில் பங்கேற்றனர்.
உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதமாதா சேவா சங்க அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். அமைப்பின் ஒன்றிய நிர்வாகிகள் நாகமணி, ராமகிருஷ்ணன், புருஷோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரத நாட்டின் பழம் பெருமைகள், இந்து மக்களின் ஒற்றுமை, குறைகள் காணாமல் வாழ்தலின் மேன்மை குறித்து பாரதமாதா சேவா சங்க நிறுவனர் சேர்மலிங்கம் பேசினார்.
ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் முருகன், பார்த்திபன், பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT