தூத்துக்குடி

போக்குவரத்து நெரிசல் பிரச்னை: கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன், டி.எஸ்.பி. முருகவேல், நகராட்சி இளநிலை பொறியாளர் லட்சுமி, நகரைமப்பு ஆய்வாளர் சேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து, அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி கிளை மேலாளர் ரமேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அண்ணா பேருந்து நிலைய கிழக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் மாடியில் கைப்பிடிச் சுவரை இன்னும் ஒரு வாரத்தில் கட்டி முடிப்பதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. கைப்பிடிச் சுவர் கட்டி முடித்ததும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT