தூத்துக்குடி

செஸ் போட்டி:கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவி சிறப்பிடம்

DIN

மாவட்ட அளவிலான செஸ்போட்டியில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கரா பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வென்று  சிறப்பிடம் பிடித்துள்ளார்.
தூத்துக்குடி, டிடிசிஏ மற்றும் டிஇஇஏஓய் சதுரங்க மையமும்,கணேஷன் பத்மாவதி கல்வி அறக்கட்டளையும் இணைந்து தூத்துக்குடி ஸ்ரீலலிதா வித்யாலயாவில் மாவட்ட அளவிலான செஸ்போட்டியை நடத்தின. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கரா பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி சி. அபிஷா வெற்றி பெற்று வெள்ளி நாணயத்தை பரிசாக பெற்றார்.
இம்மாணவிக்கு பள்ளி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. பள்ளிச் செயலர் ஏ. சுந்தரலிங்கம், துணைச் செயலர் ஜி. காசிஆனந்தம், பள்ளி முதல்வர் பி.தேவிசுஜாதாராஜா, துணை முதல்வர் எஸ். சிவரத்னா, ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வேல்ராஜன், கல்லூரி துணை முதல்வர் எஸ். மகேஷ்குமார் ஆகியோர் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT