தூத்துக்குடி

403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

DIN

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  விழாவில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு 403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நிகழாண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்-மாணவிகளுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT