தூத்துக்குடி

27இல் பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 20,007 எலுமிச்சை யாகம்

DIN

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) 20,007 எலுமிச்சை பழ யாகம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி - காலபைரவர் சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நல்லமழை பெய்யவும், உலக மக்கள் ஆரோக்கியமாக வாழவும் வேண்டி, ஜன. 27ஆம் தேதி தை மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு 20,007 எலுமிச்சைப் பழம் கொண்டு சிறப்பு மகாயாகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்று காலை 6 மணிக்கு சிறப்பு மகா கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு 20,007 எலுமிச்சைப்பழங்கள் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெறுகிறது.
பின்னர், ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கும், காலபைரவருக்கும் 16 வகையான அபிஷேகமும்,  பிற்பகல் 1.30 மணிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும்  வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT