தூத்துக்குடி

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 6 தினங்களாகவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற தர்னா போராட்டம் நடைபெற்று வந்தது.  இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை எனக் கூறி சென்னையில் போலீஸார் மாணவர்கள் மீது தாக்குதலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இதைக் கண்டித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர்மன்ற முன்னாள் தலைவி மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன், முத்துகாந்தாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், கட்சி நிர்வாகிகள் ராமசுப்பு, சக்திவேல்முருகன், தெய்வேந்திரன், தங்கவேல், விஜயலட்சுமி, மாடசாமி, ரத்தினம், முத்துமாரியப்பன், காளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT