தூத்துக்குடி

தகுதியுடைய இளைஞர்கள் அனைவரும் வாக்காளர்களாக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய தகுதியுடைய அனைவரும் வாக்காளர்களாக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி அவர் பேசியது:
ஜன. 25ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பேரணிகள், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.  எவ்வித பாகுபாடுமின்றி 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது. எனவே, தகுதிவாய்ந்த அனைத்து இளைஞர்களையும் வாக்காளர்களாக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சார்-ஆட்சியர் தீபக் ஜேக்கப், வட்டாட்சியர்கள் சங்கரநாராயணன், ராமகிருஷ்ணன் (தேர்தல்), கல்லூரி முதல்வர் து. நாகராஜன், வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ.தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வஉசி கல்லூரி வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT