தூத்துக்குடி

உடன்குடியில் விதிமுறையை பின்பற்றாத கருப்புக்கட்டி ஆலைக்கு சீல்

DIN

உடன்குடியில் உணவுப்பாதுகாப்பு விதிமுறையை கடைப்பிடிக்காத கருப்புகட்டி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கணேஷ்குமார் (உடன்குடி), குருசாமி(காயல்பட்டினம்) ஆகியோர் உடன்குடியில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கருப்புக்கட்டி ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உடன்குடி-செட்டியாபத்து சாலையில் செயல்படும் கருப்புக்கட்டி ஆலை உணவுப்  பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆலையில் இருந்து பனங்கற்கண்டு மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக சேகரித்தனர்.
பின்னர் அந்த ஆலை தொடர்ந்து செயல்படா வண்ணம் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. மேலும் உடன்குடி பகுதியில் செயல்படும் அனைத்து கருப்புக்கட்டி ஆலைகளும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT