தூத்துக்குடி

மாவட்ட செஸ் போட்டி: தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் தூத்துக்குடி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்தனர்.
கோவில்பட்டி கே.டி.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாதெமி மற்றும் ஜிம், ராஜீவ்காந்தி விளையாட்டுக் கழகம் மற்றும் டி.கே. செஸ் சென்டர் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்ற செஸ் போட்டி கே.டி.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 75 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கான பிரிவில் தூத்துக்குடி அழகர் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர் சுப்பு கார்த்திக் முதலிடம், ராஜசேகரன் (23) 2ஆம் இடமும், சிவா(22) 3ஆம் இடமும் பெற்றனர்.
பெண்கள் மற்றும் மாணவியருக்கான பிரிவில், தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி கெளரி முதலிடமும், தூத்துக்குடி விகாசா மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி பொன்வர்ஷா 2ஆம் இடமும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி குருசித்ரா 3ஆம் இடமும் பிடித்தனர்.
போட்டியின் நடுவர்களாக மணிமொழிமங்கை, முத்துச்செல்வி, சாந்தி மற்றும் டி.கே. செஸ் அகாதெமியைச் சேர்ந்த கற்பகவள்ளி ஆகியோர் செயல்பட்டனர்.
கே.டி.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாதெமியைச் சேர்ந்த காளிமுத்துப்பாண்டிராஜா, ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகச் செயலர் குருசித்ரசண்முகபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி ரயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் பரிசுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT