தூத்துக்குடி

மீன்பிடிப் படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது: ஆட்சியர்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி பெற்ற படகுகளை சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் மீன்பிடிக் கலன்களான நாட்டுப்படகு, கட்டுமரம், வள்ளம் விசைப்படகு ஆகிய அனைத்தும் மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மீன்பிடித் தொழில் தவிர்த்து, சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றிச் செல்லுதல், சொந்த போக்குவரத்துக்குப் பயன்படுத்துதல், ஊர்த் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை படகில் ஏற்றிச் செல்லுதல் மற்றும் சட்ட விதிகளுக்கு முரண்பாடான செயல்களுக்கு படகுகளைப் பயன்படுத்துதல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
இதையும் மீறி எந்தவித பாதகமான செயல்களில் ஈடுபடும் படகை ஓட்டுபவர் மற்றும் படகின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும், அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு  ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதிகள் 1983-க்கு எதிரான கடுமையான குற்றமாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட மீன்பிடிக் கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மீன்பிடிக் கலன்களை மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாடு படகு விபத்து: கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு கடலில் மீன்பிடிப் படகில் ஏற்றிச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 10 பேர், படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT