தூத்துக்குடி

டெங்கு தடுப்புப் பணி ஆய்வில் இரு வீடுகளுக்கு அபராதம்

DIN

கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு பணி ஆய்வின்போது, கீழ்நிலைத் தொட்டிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாகியிருந்த இரு வீட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டு பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் கொசு ஒழிப்புப் புகை அடிக்கும் பணிகள் சில நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை பசுவந்தனை சாலை, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முருகேசன் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கீழ்நிலை தொட்டிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாகியிருந்த இரு வீட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT