தூத்துக்குடி

கயத்தாறு அருகே தீக்காயமடைந்த பெண் சாவு

DIN

கயத்தாறு அருகே தீக்காயமடைந்த பெண் வியாழக்கிழமை அதிகாலை இறந்தார். 
கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்து பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மகன் அப்துல்ரகுமான்(36). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி பஷிராபானு(32). இவர் இம்மாதம் 15ஆம் தேதி வீட்டில் சமையல் செய்வதற்காக  மண்ணெண்ணெய் அடுப்பை பற்றவைக்கும் போது இவரது சேலையில் தீப்பிடித்து காயமடைந்தார்.  இதையடுத்து,  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்   அங்கு  வியாழக்கிழமை அதிகாலை இறந்தார்.  இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.  
விவசாயி தற்கொலை: கயத்தாறையடுத்த ஆத்திகுளம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜ்குமார்(31). விவசாயியான இவர், பலரிடம்  கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை காலை தோட்டத்திற்கு செல்வதாகக் கூறிச் சென்ற இவர், அங்கு விஷமருந்தினாராம். தகவல் தெரிந்தவுடன் அவரது சகோதரர் துரைப்பாண்டி மற்றும் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று  ராஜ்குமாரை மீட்டு கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். 
  இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸார் சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT