விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் முரசு. தமிழப்பன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி.பா.பாரிவள்ளல், மாவட்ட செய்தித் தொடர்பாளர் வடிவேல்முத்து, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தியல் பரப்புரை மைய மாநில துணைச் செயலர் இர.பு.தமிழ்க்குட்டி, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜ்குமார், சிவா, தினேஷ், ஒன்றியச் செயலர்கள் ஆ.சங்கத்தமிழன், இ.ஜெ.துரை, பூலால் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் அ.உ.உதயா நன்றி கூறினார்.