கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் வேல்ராஜன் தலைமை வகித்தார். துணைமுதல்வர் மகேஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மாணவி கிளாடிஸ் மில்கா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில், லயோலா கல்லூரி வணிக மேலாண்மை துறைத் தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு, 'தொழில்முனைவோர்'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொழில் தொடங்க திட்டமிடுதல் பற்றியும், மாவட்ட தொழில்துறை அலுவலகத்தில் தொழில் பதிவு செய்யும் முறை பற்றியும், வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்யும் முறை பற்றியும், திட்ட அறிக்கை தயாரிப்பதைப் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். இதில், வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் ஜெயந்தி, எமிலிலி,நர்மதா, ஐகோட் மகராசி ஆகியோர் கலந்துகொண்டனர்.