வைகோ மீது வழக்கு
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி,தூத்துக்குடியில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை போராட்டத்துக்கு
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி,தூத்துக்குடியில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் பேசியதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கூட்டத்தில் வைகோ பேசும்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், அரசுக்கு எதிராகவும் மற்றும் பொது அமைதிக்கு எதிராகவும் ஒரு குற்றத்தை தூண்டும் விதமாகவும் பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, வைகோ மீது 505(1) (பி), 7 (1) (ஏ) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.