தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

காயல்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட கல்வித் துறை, காயல்பட்டினம் நகராட்சி மற்றும் நாகர்கோவில் பைரவி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய   இப்பேரணியை, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி முன் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் லட்சுமணசுவாமி, பள்ளித் தாளாளர் நைனா சாகிப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி வளாகத்தை அடைந்தது. அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில் பசுமை விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோர் பேசினர். முன்னதாக சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT