தூத்துக்குடி

கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தல்

DIN

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. 
வீரபாண்டிய கட்டபொம்மனின் 219ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கட்டபொம்மன் சிலைக்கு அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.குட்டி தலைமையில் அந்த அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   மேலும், அறக்கட்டளை சார்பில் வீரசக்கதேவி ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். 
இவ்வமைப்பினர், மணிமண்டபம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும், கட்டபொம்மன் நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும். மணிமண்டபம் மற்றும் கட்டபொம்மன் நினைவிடத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.  மாலை நேரங்களில் காவலர்களை பணி நியமித்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT