தூத்துக்குடி

கந்தபுரம் ஆலயத்தில் ராம நவமி விழா

DIN


உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் ராம நவமி விழா நடைபெற்றது.
இதையொட்டி சனிக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி பூஜை, மங்கள ஆரத்தி, அகண்ட நாம சங்கீர்த்தனம், கூட்டுப் பஜனை, பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
சாத்தான்குளத்தில் இன்று...
 சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் ராம நவமி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.14) நடைபெறுகிறது. 
சாத்தான்குளம் பிள்ளையார் சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில், கீர்த்தனை, சமயச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, சிறப்பு உபன்யாசம்,  பகவத்கீதை, பக்தி சார்ந்த சமய கலந்துரையாடல் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 
ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT