தூத்துக்குடி

தமிழ் புலிகள் ஆர்ப்பாட்டம்

DIN

தலித் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விளாத்திகுளத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணவேணி என்பவர் காணாமல் போன நிலையில் அவர் பந்தல்குடி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கிருஷ்ணவேணியை எரித்து கொன்ற சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்; மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை திரும்பப்பெற வேண்டும்; ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி விளாத்திகுளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலர் மகேஷ் தலைமை வகித்தார். விளாத்திகுளம் பேரவைத் தொகுதிச் செயலர் மாரிமுத்து, ஒன்றியச் செயலர்கள் ரவி, கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,  அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் கலைவேந்தன், வீரப்பெருமாள், ஆதிவீரன், முத்துராஜ், தாஸ், பாலு, இளங்கோ, சிவகுமார், பீமாராவ், துர்கா, கவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT