தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

DIN

விளாத்திகுளம் வட்டார தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் கற்பித்தல் குறித்த மூன்றாம் கட்ட பயிற்சி முகாம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமினை, விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன் தொடங்கி வைத்தார். முகாமில்,  கியூ.ஆர் கோடு பயன்படுத்தி இணையதளம் வழியாக மாணவர்களுக்கு கற்பித்தலை மேம்படுத்துதல்,  புதிய பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்,  மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பித்தல், பாடத்திட்டத்தின் அடிப்படை கருத்துரு, புதிய பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறிவுகூர்மை பெற்று எவ்வாறு பயன்பெறுவார்கள் என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியில், 107 பள்ளிகளைச் சேர்ந்த 249 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலகம் சார்பில் மேற்பார்வையாளர் பெர்னார்டு ஹிலாரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT