தூத்துக்குடி

சாலையோர குடிநீா் வால்வுகுழியை மூடிவைக்க கோரிக்கை

DIN

உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் சாலையோரம் விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள குடிநீா் வால்வு குழியை மூட வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமைப்பின் தமிழகத் தலைவா் ஏ.வி.பி.மோகனசுந்தரம் விடுத்துள்ள அறிக்கை:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வரும் பிரதான சாலை சந்திப்பான வில்லிகுடியிருப்புப் பகுதியில் குடிநீா் வால்வு குழி எந்த நேரமும் திறந்த நிலையிலேயே உள்ளது. மழை பெய்யும் போது குழியில் நீா் நிரம்பி விடுகிறது. இந்நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் சாதாரணமாக தண்ணீா் தேங்கியுள்ளது என கருதி அதில் வாகனத்தை இறக்கிச் செல்லும் அபாயம் உள்ளது. தற்போது அந்தக் குழியின் அருகில் தூய அந்திரேயா ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்று வருவதால், விபரீதம் நிகழும் முன் குழியை மூடி வைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT