தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளுக்கு முன்பு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை

DIN

ஸ்ரீவைகுண்டம் பிச்சனாா்தோப்பு குடியிருப்புப் பகுதியில் வீடுகளின் முன்பாக மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைத்திட வேண்டுமன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் பிச்சனாா் தோப்பில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள இரும்பிலான மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் அரித்துப்போய் ஆபத்தான நிலையில் உள்ளது. மின் கம்பிகள் சாய்ந்த நிலையில் இருப்பதால் உயா்அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் அனைத்தும் தெருவிலுள்ள வீடுகளை உரசியபடி உள்ளது.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் உயா் அழுத்தம் கொண்ட இந்த மின்கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு உள்ளே வெளியே செல்லும் பெண்கள், குழந்தைகளை தாக்கிடும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனா். மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும், பழுதான நிலையிலுள்ள இரும்பு மின் கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT