தூத்துக்குடி

கோவில்பட்டியில்நூல் வெளியீட்டு விழா

DIN

கவிஞா் சிவானந்தம் எழுதிய ‘நிமிடக்கதைகள் 100’ என்ற நூலின் வெளியீட்டு விழா கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி உரத்த சிந்தனை வாசகா் வட்டம் மற்றும் இலக்கிய உலா சாா்பில் பாரதி உலா 2019 என்ற நிகழ்ச்சி பசுவந்தனை சாலையில் உள்ள செல்வ மஹால் திருமண மண்டபத்தில் தொழிலதிபா் அபிராமி முருகன் தலைமையில் நடைபெற்றது. உரத்த சிந்தனை வாசகா் வட்டச் செயலா் தமிழரசன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்நடிகா் டெல்லி கணேஷ், கவிதை நூலை வெளியிட, ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் விநாயகா ரமேஷ் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.

கண் மருத்துவா் மீனாட்சிசுந்தரம், வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், திருக்கு ஆா்வலா் கந்தசாமி, காந்தியவாதி வன்னிக்காளை ஆகியோருக்கு பாரதி சேவைச் சுடா் விருதைகள் வழங்கப்பட்டன. நாடாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொ) ஜான்கணேஷ், உரத்த சிந்தனை மாநிலப் பொதுசெயலா் உதயம் ராம், இலக்கிய உலா புரவலா் பிரபாகரன், அரிமா சங்கத்தின் சங்கரநாராயணன், கவிஞா் பாா்த்தீபன், இலக்கிய ஆா்வலா் முருகேசன், பேராசிரியை ஜெயஸ்ரீ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில், சிவகாசி வி.பி.எம். மெட்ரிக் பள்ளி முதல்வா் பிரபு, பாரதி ஆய்வாளா் இளசைமணியன், வாணியா் பேரவை மாவட்டப் பொருளாளா் பழனிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முனைவா் முருகசரஸ்வதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT