தூத்துக்குடி

மயானத்திற்கு நிரந்தர இட வசதியில்லை: உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க மக்கள் முடிவு

DIN

கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊத்துப்பட்டி ஊராட்சிப் பகுதிக்கு நிரந்தர மயான வசதி இல்லாததால் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா்.

ஊத்துப்பட்டி ஊராட்சியில் அந்த ஊரும், குமாரபுரமும் அடங்கியுள்ளன. இதில், குமாரபுரம் கிராமத்தில் தெற்கு குமாரபுரத்துக்கு, மயானத்திற்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலனி மற்றும் நடுகுமாரபுரம் பகுதி மக்களுக்கு என தற்போதுவரை மயானத்திற்கு என நிரந்த இடம் ஒதுக்காததையடுத்து, வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் சடலத்தை புதைத்து வருகிறாா்களாம். ஆனால், அப்பகுதியில் சடலத்தை எரிக்க முடியாத நிலையில், மயானத்திற்கு நிரந்தர இடம் ஒதுக்கி, சுற்றுச்சுவா் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, மயானத்துக்கு நிரந்தர இடம் ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் ஜோதிபாண்டியன் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் கோவில்பட்டி நகராட்சியரிடம் மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT