தூத்துக்குடி

பாஜக சார்பில் நடைபெறவிருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

DIN

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பாஜக சார்பில் நடைபெறவிருந்த காத்திருப்புப் போராட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,  ஒத்திவைக்கப்பட்டது. 
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலராகப் பணியாற்றி வந்தவர் பணியிடமாற்றம் செய்த பின்னர், எவ்வித அனுமதியுமின்றி அலுவலக ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும்,  அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் பாஜக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும் பாஜக நகரத் தலைவர் வேல்ராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.  இதையடுத்து, நகராட்சி ஆணையர் அச்சையா தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில், நகராட்சி மேலாளர், காவல் துறை உதவி ஆய்வாளர் மணிமாறன்,  பாஜக நகரத் தலைவர் வேல்ராஜா, துணைத் தலைவர் நல்லதம்பி, பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன்,  பிரசாரப் பிரிவு மாவட்ட  துணைத் தலைவர் லட்சுமணக்குமார்,  உள்ளாட்சிப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பாலசீனிவாசன்,  மாவட்டச் செயலர் முனியராஜ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், பணி மாறுதல் செய்யப்பட்ட சுகாதார அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து துறை மேலதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து,  காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT