தூத்துக்குடி

விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா

DIN

விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில், 5ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீஅம்பாள் வித்யாலயா கல்வி அறக்கட்டளை ஆலோசகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் எஸ்.கே. சுப்பாரெட்டியார் முன்னிலை வகித்தார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி, யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
விழாவில் பள்ளி நிர்வாக அலுவலர் நரசிம்மராஜ், பள்ளி முதல்வர் ஜெயகாந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள் சிவபால குமரன், காயத்ரி, வையணன், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆர். மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT