தூத்துக்குடி

சந்தையடியூர் கோயிலில் பால்முறைத் திருவிழா நிறைவு

DIN

உடன்குடி சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த பால்முறைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. 
இந்த பதியில் பால்முறைத் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் அய்யா தினமும் காலை மற்றும் இரவில் அன்னம், நாகம், கருடர், குதிரை, அனுமார் வாகனங்களில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, சந்தனக்குடம் எடுத்தல், தர்மம்  எடுத்தல், உம்பான் தர்மம் வழங்கல், விளக்கு வழிபாடு, சிறப்பு  அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அய்யா பூஞ்சப்பரத்தில் பவனி வருதல், பால் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை அய்யா வழி மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT