தூத்துக்குடி

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கான மருத்துவப் படியை மாதந்தோறும் ரூ.2 ஆயிரமாக வழங்க வேண்டும்;  பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு ஜனவரி 2017  முதல் வழங்க வேண்டிய 15  சதவீத உயர்வுடன் கூடிய  ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும்;  ஒப்பந்தத் 
தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்;  பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கான 4ஜி அலைக்கற்றையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். உதவித் தலைவர் கந்தசாமி, உதவிச் செயலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 ஓய்வூதியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ், ஓய்வூதியர் சங்கச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கச் செயலர் பாலசுப்பிரமணியன், தலைவர் மகேந்திரமணி, ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலர் பாலசிங், ஓய்வூதியர் சங்கப் பொருளாளர் திருவட்டப்போத்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT