தூத்துக்குடி

பள்ளியில் சுகாதார வளாகம் திறப்பு

DIN

திருச்செந்தூர் அருகேயுள்ள மணக்காடு சுதந்திர வித்தியாசாலை நடுநிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
இப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் ரூ. 14 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு கோட்டாட்சியர் தி.தனப்ரியா தலைமை வகித்து, வளாகத்தை திறந்துவைத்தார். பெட்ரோலிய நிறுவன திருச்செந்தூர் விநியோகஸ்தர் ஹரிகிருஷ்ணன் வடமலைப்பாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில், பெட்ரோலிய நிறுவன மதுரை மண்டல துணைப் பொது மேலாளர் பரத், மண்டல முதுநிலை பொறியாளர் ஆதித்யா விக்ரம்சிங், தூத்துக்குடி மாவட்ட விற்பனை மேலாளர் அனிஸ், சமூக ஆர்வலர் செந்தில்அதிபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமையாசிரியை சுகந்தி வரவேற்றார். ஆசிரியை செலின் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் லிங்கபாண்டி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT