தூத்துக்குடி

எட்டயபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்ரூ.2.64 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்

DIN

எட்டயபுரம்  மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2. 64 கோடியில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர்  பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களைப் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி  இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுகுமார்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆழ்வார் உதயகுமார், எழுத்தாளர் இளசை மணியன்,  தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், அறிவியல் ஆய்வக கட்டடம் மற்றும்  ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட பெரியசாமிபுரத்தில் ரூ.1.11 கோடியில்  மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியையும் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT