தூத்துக்குடி

தூத்துக்குடியில் 250 கிலோ பவளப்பாறைகள் பறிமுதல்

DIN


தூத்துக்குடியில், வண்ண மீன் விற்பனைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பவளப்பாறைகளை வனத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வண்ண மீன்கள் விற்கும் கடையில் பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வன அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, மீன் தொட்டிகளில் வைத்து வெளியூர்களுக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பவளப்பாறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றில் சில பவளப்பாறைகள் தண்ணீரில் வைத்து பாதுகாக்கப்பட்டிருந்ததால் அவற்றை வனத் துறையினர் மீண்டும் கடலுக்குள் இட்டனர்.
சம்பவம் தொடர்பாக அண்ணா நகரைச் சேர்ந்த இளஞ்செழியன் (50), கற்குவேல் (32), சுப்பிரமணியன் (42) ஆகிய மூவரிடம் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT