தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு

DIN

தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகாரட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வு மெளன நாடகம் நடைபெற்றது.  கல்லூரி வளாகத்தில் தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் போன்று அமைக்கப்பட்டிருந்த மாதிரியை ஆணையர் வீ.ப. ஜெயசீலன் பார்வையிட்டார்.
 நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு,  வஉசி பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. சீனிவாசன்,  வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம்,  மாநகராட்சி உதவி ஆணையர்கள் சரவணன்,  ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT