தூத்துக்குடி

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN


கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து சொர்ணமலை கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலை பூஜை நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரம் வழியாக வந்து, மூலவர் கதிர்வேல் முருகர், விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
விழாவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மண்டகப்படிதாரர் காளிராஜன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT