தூத்துக்குடி

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பயிற்சி

DIN


மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பேசுகையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புப் பணியை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆர். பிரகாஷ்,  முத்தமிழ், ரமேஷ்,  மாரியப்பன்,  பால்துரை, காவல் ஆய்வாளர்கள் அருள் ரோஸ் சிங், பாலமுருகன, காவல் துறை மக்கள் தொடர்பு அலுவலர் சத்திய நாராயணன் மற்றும் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT