தூத்துக்குடி

உடன்குடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

DIN

உடன்குடியில் உலக புவி தினத்தையொட்டி மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றன.
உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலயம் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஆர்தர் பார்டிங்கர் சுற்றுச்சூழல் கழகம் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரங்களைப் பாதுகாத்தல், செடிகள் வளர்த்தல், தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
உலக புவி தினத்தையொட்டி மழலையர், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஓவியம் வரைதல் போட்டி  டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது. "எனது பூமி எனது கடமை' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியை சேகரகுரு செல்வன் மகாராஜா தொடங்கி வைத்தார். சேகரச் செயலர் பால்ராஜ், பொருளாளர் பிரின்ஸ், போதகர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆர்தர் பார்ட்டிங்கர் சுற்றுச்சூழல் கழக இயக்குநர் ஜான்சாமுவேல் உள்பட பலர் பேசினர். முன்னதாக மாணவர், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. வரும் மே 5 ஆம் தேதி நடைபெறும் புவி தின நிகழ்ச்சியில் ஓவியப் போட்டியில் சிறப்பிடம்  பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT