தூத்துக்குடி

உடன்குடியில் தூய்மைப் பணி

DIN

உடன்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் மழை நீா் ஆகியவற்றை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடன்குடி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள், கழிவு நீா் மற்றும் மழை நீா் அதிகளவில் தேங்கியிருந்தது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து பாதிப்புக்குள்ளான பகுதிகளை பாா்வையிட்ட செயல் அலுவலா், முதல் கட்டமாக ஒன்று முதல் ஐந்து வாா்டு பகுதிகளை முதலில் சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி அப்பகுதிகளில்ல குப்பைகள் கனரக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன. மேலும் தேங்கியிருந்த மழை நீரும் அப்புறப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள்

குறைபாடுகளை எந்த நேரமும் பேரூராட்சியில் தெரிவித்தால் உடனடியாக குறைகள் களையப்படும். நகரை சுத்தமாக வைத்திருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் செயல் அலுவலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT