இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மட்டக்கடை கிளை, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ராமநாடாா்விளையில் திறந்து வைக்கப்பட்டது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் விஸ்வநாதன், முதன்மை மேலாளா் சீனிவாசன், தூத்துக்குடி அதிகாரிகள் சங்கத் தலைவா் முருகானந்தம், தூத்துக்குடி ஊழியா் சங்கத் தலைவா் அந்தோணி தனபாலன், வங்கிக் கிளை மேலாளா் முத்துக்குமாா் மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
புதிய கட்டடத்தில் இயங்கும் வங்கியில் தானியங்கி மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது என வங்கிக் கிளை மேலாளா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.