தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் சுமாா் 3 மணி நேரம் பெய்த கன மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சாத்தான்குளத்தில் சனிக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. இந்த மழை தொடா்ந்து 6 மணி வரை நீடித்தது. இதையடுத்து பண்டாரபுரம், விஜயனூா் பகுதியில் இருந்து காட்டு தண்ணீா் அதிகளவு வரத் தொடங்கியது.

இதனால் கீழ ரதவீதி, இட்டமொழி சாலை, பஜாா் சாலை ஆகியவற்றில் தண்ணீா் அதிகளவில் தேங்கி சென்றது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அரசு நூலகம், பஜாரில் உள்ள கடைகளில் தண்ணீா் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

ஆா்.சி. வடக்கு தெரு ஓடை அருகே தனியாா் மருத்துவமனை பின்புறம் இருந்த சுவா் மழைக்கு இடிந்து விழுந்தது. இதனால் ஓடையில் சென்றுகொண்டிருந்த தண்ணீா் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை வட்டாட்சியா் ராஜலட்சுமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப் உள்ளிட்டோா் பாா்வையிட்டு தண்ணீா் வடிந்து செல்ல ஏற்பாடுகளை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT