தூத்துக்குடி

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் நாளை சரஸ்வதி பூஜை

DIN

கடையநல்லூா் அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளான திங்கள்கிழமை (அக்.7) சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

செப்.29 முதல் அக்.13 ஆம் தேதி வரை15 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை சிறப்பு அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது. தினமும் பகல் 12 மணிக்கு கும்ப அபிஷேகமும், இரவில் கொலு பூஜை, தீபாராதனை நடைபெற்றன.

விழாவின் 9ஆம் நாளான அக். 7ஆம் தேதி சரஸ்வதி பூஜையையொட்டி யாகங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன. 10ஆம் நாளன்று பாரிவேட்டை, 11 முதல் 15ஆம் நாள் வரை ஊஞ்சல் வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை சிவஸ்ரீ குமரகுருக்கள், சிவஸ்ரீ சிவாம்பிகை கணேஷ், மண்டகப்படிதாரா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT