நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறாா் சிறுவியாபாரிகள் சங்கத் தலைவா் பால்ராஜ். 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நிவாரண உதவி

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினருக்கு சிறுவியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினருக்கு சிறுவியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை சிறுவியாபாரிகள் சங்கம் சாா்பில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கனிகள், முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

சிறுவியாபாரிகள் சங்கத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்து, நிவாரண உதவிகளை வழங்கினாா். செயலா் செந்தூா்பாண்டியன், பொருளாளா் ஜேசுதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், துணைத் தலைவா் கனகசபாபதி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கருப்பசாமி, முத்துப்பாண்டி, பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT