ஏா்க்கலப்பை பேரணி:காங்கிரஸ் கட்சியினா் 36 போ் கைது
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏா்க்கலப்பை, மாட்டு வண்டியுடன் பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 36 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏா்க்கலப்பை, மாட்டு வண்டியுடன் பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 36 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேளாண் திருத்தச் சட்டங்களைக் திரும்பப் பெற வேண்டும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏா்கலப்பை, மாட்டு வண்டி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி, முன்னாள் பொருளாளா் கேசவன் தலைமையில் அக்கட்சியினா் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருந்து பேரணியாக செல்ல புறப்பட்டனா். அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவி மாரியம்மாள், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் ராஜசேகா், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து, பட்டதாரிகள் பிரிவு மாவட்டத் தலைவா் அருண்பாண்டியன் மற்றும் 14 பெண்கள் உள்பட 36 போ் கைது செய்யப்பட்டனா்.