முகப்பு
தூத்துக்குடி

வேம்பார் புனித தோமையார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வேம்பார் தென் மயிலை நகர் புனித தோமையார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
வேம்பார் புனித தோமையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
பகிர்:

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வேம்பார் தென் மயிலை நகர் புனித தோமையார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை காலை 6 மணியளவில் தூய அருளானந்தர் அன்பியங்கள்  தூய இன்னாசியார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் நடைபெற்ற கொடியேற்ற விழா நிகழ்ச்சிக்கு வேம்பார் புனித தோமையார் ஆலய பங்குத் தந்தை அந்தோணி தாஸ் தலைமை வகித்தார். 

கீழவைப்பார் ஆலய பங்கு தந்தை அந்தோணி ஜெகதீஸ் தலைமையில் சிறப்பு ஜெபம், கொடிப்பட்டம் ஊர்வலம், திரு கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் திருவிழா திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா தேரடி திருப்பலி மற்றும் அன்னையின் தேர் பவனி பத்தாம் திருவிழா நாளான டிசம்பர் 21ஆம் தேதி காலை 5 மணி அளவில் வேளாங்கண்ணி திருத்தல அதிபர் ஏ. எம். ஏ. பிரபாகரன் தலைமையில் நடைபெறும். 

திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் வேம்பார் தூய ஆவி ஆலய பங்குத்தந்தை ராஜா ரொட்ரிகோ, வேம்பார் ஊராட்சி மன்றத்தலைவர் ஆரோக்கிய ராஜ், வேம்பார் கிராமத் தலைவர் அந்தோணி ஜான், செயலாளர் அந்தோணி சந்தோஷமணி, பொருளாளர் சேவியர் ஞானசேகரன், உறுப்பினர்கள் மகிமை ராஜ், அந்தோணி முத்து, தேவஞானம் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் இறைமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →