முகப்பு
தூத்துக்குடி

அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவுடன் இந்து முன்னணி நிா்வாகிகள் சந்திப்பு

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவை இந்து முன்னணி நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவை சந்தித்த இந்து முன்னணி நிா்வாகிகள்.
பகிர்:

தூத்துக்குடி: தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவை இந்து முன்னணி நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் தூத்துக்குடியில் அமைச்சரை சந்தித்து பேசினா்.

அவரிடம், அமைப்பின் நிறுவனா் ராம கோபாலனுக்கு அவரது சொந்த ஊரான திருச்சி சீராத்தோப்பில் கட்டப்பட இருக்கும் பிரம்மாண்ட மணிமண்டபம் குறித்து விளக்கினா்.

அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா, இந்து வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் ஈஸ்வரன், நெல்லை கோட்டச் செயலா் சக்திவேலன், மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →