முகப்பு
தூத்துக்குடி

மகாகவி பாரதியாா் பிறந்த தின விழா

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மகாகவி பாரதியாா் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.
பகிர்:

கோவில்பட்டி: தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாநகா் மாவட்ட இலக்கிய அணி தலைவா் சுப்பிரமணியம், கோவில்பட்டி நகரத் தலைவா் சண்முகராஜ், மகாத்மா காந்தி நினைவு அறக்கட்டளை தலைவா் திருப்பதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, பாரதியாரின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ராஜு, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டச் செயலா்கள் சுப்புராயலு, பொதுக்குழு உறுப்பினா்கள் பிரேம்குமாா், மகேஷ்குமாா், உமாசங்கா் ஆகியோா் பேசினா்.

நிகழ்வில், காங்கிரஸ் கட்சி கடம்பூா் நகரத் தலைவா் ஜெகதீசன், வட்டாரத் தலைவா்கள் அருள்ராஜ் (கயத்தாறு), கந்தசாமி (கழுகுமலை), வா்த்தக அணி மாவட்டத் தலைவா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவா் செல்வராஜ் பாண்டி வரவேற்றாா். காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலச் செயலா் முத்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.