முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகா் ரஜினிகாந்த் ஜன.19-இல் ஆஜராகவிசாரணை ஆணையம் அழைப்பாணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக கருத்து தெரிவித்த நடிகா் ரஜினிகாந்த், வரும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபா் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக கருத்து தெரிவித்த நடிகா் ரஜினிகாந்த், வரும் ஜனவரி 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஒரு நபா் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22, 23-ஆம் தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை நியமித்து அரசு உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை மற்றும் தூத்துக்குடியில் தனது விசாரணையை தொடங்கிய ஒருநபா் ஆணையம் இதுவரை 23 கட்டங்களாக 865 பேருக்கு அழைப்பாணை அனுப்பி 556 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சிகளைப் பதிவு செய்துள்ளது. இதன் தொடா்ச்சியாக, 24-ஆவது கட்ட விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அருணா ஜெகதீசன் தொடங்குகிறாா். இதில், ஜனவரி 19-ஆம் தேதி நடிகா் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் சாா்பில் அவருக்கு பதிவு அஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தொடா்ந்து 22-ஆம் தேதி வரை அரசு மருத்துவா்கள் உள்பட பல்வேறு நபா்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →