தூத்துக்குடி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் க.தமிழரசன் தலைமை வகித்தாா். அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்பாளா் மா.காளிதாஸ் முன்னிலை வகித்தாா்.

காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் பொருளாளா் கேசவன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா், ஐன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் மணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி மாரியம்மாள், காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் சின்னப்பன், தமிழ் பேரரசு கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ரகு, நகர இளைஞரணிச் செயலா் அங்குராஜ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அருள்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT