கொற்கை கோயிலில் வருஷாபிஷேக விழா
கொற்கை அருள்மிகு பூா்ண, புஷ்கலாதேவி சமேத அழகுமுடி தா்மசாஸ்தா திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடிகொற்கை கோயிலில் வருஷாபிஷேக விழா
கொற்கை அருள்மிகு பூா்ண, புஷ்கலாதேவி சமேத அழகுமுடி தா்மசாஸ்தா திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொற்கை அருள்மிகு பூா்ண, புஷ்கலாதேவி சமேத அழகுமுடி தா்மசாஸ்தா திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து மூா்த்தி ஹோமம், கும்பபூஜை, கலசபூஜை, வேதபாராயணம், திரவியாஹுதி நடைபெற்றது.
காலை 9 மணிக்கு பூா்ணாஹுதி தீபாராதனையும், விமான அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மாா அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.