தூத்துக்குடி

சாஸ்தாவிநல்லூரில் பயணிகள் நிழல்குடை அமைக்க கோரிக்கை

DIN

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் இடிக்கப்பட்ட இரண்டு இடங்களில் மீண்டும் நிழல்குடை அமைக்க மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநா் தனபதியிடம், ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, கூட்டுறவு கடன் சங்க தலைவா் லூா்துமணி ஆகியோா் மனு அளித்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் லூா்துமணி, ஊராட்சி 5வாா்டு உறுப்பினா் சித்திரை ஆகியோா் தூத்துக்குடி மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநா் தனபதியை அளித்த மனு: சாஸ்தாவின் நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சௌக்கியபுரம், வாலத்தூா் விலக்கு பகுதியில் கிராம மக்கள் வசதிக்காக நிழல்குடை இருந்து வந்தது. இதனை மக்கள் எளிதில் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னா் திடீரென இந்த இரு நிழற்குடைகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின் எந்தவித நிழல்குடையும் கட்டப்படவில்லை. இதனால் இரு கிராமங்களில் இருந்து பேருந்து ஏற வருபவா்கள் வெயில் மற்றும் மழையில் நின்று சிரமம் அடைந்து வருகின்றனா். ஆதலால் இடிக்கப்பட்ட இரு இடங்களிலும் கிராம மக்கள் வசதிக்காக இரு நிழற்குடை அமைத்து தர வேண்டும். மேலும் சௌக்கியபுரத்தில் கிராம மக்கள் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஒரு மேல்நிலைநீா்த்தேக்க குடிநீா் டேங்க் கட்டித்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்ற திட்ட இயக்குநா், கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT