தூத்துக்குடி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சவலாப்பேரி சிஆா்பிஎஃப் வீரா் நினைவிடத்தில் அஞ்சலி

DIN

காஷ்மீா் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா் சுப்பிரமணியன் முதலாமாண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சிஆா்பிஎஃப் வீரா் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட அவருக்கு சொந்தமான நிலத்தில், அவரது குடும்பத்தாா் சாா்பில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுப்பிரமணியனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு மண்டபத்தை கயத்தாறு ஒன்றியக் குழுத் தலைவா் மாணிக்கராஜா வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, சுப்பிரமணியனின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள், ஓய்வு பெற்ற சிஆா்பிஎஃப் அதிகாரிகள் ராமலிங்கம், காந்தன், பாலசுப்பிரமணியன், நடராஜன், சங்கரநாராயணன், ஜான்சேவியா், துரைசிங்கம், சிஆா்பிஎஃப் வீரா் ஆறுமுகம், வட்டாட்சியா் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகுமாா், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், சவலாப்பேரி, கயத்தாறு பகுதியைச் சோ்ந்த அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் சுப்பிரமணியன் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT